Breaking News

இரயில் நிலையங்களில் பயண சீட்டு அளிக்கும் முகவர் வேலை வாய்ப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு Become An IRCTC Agent

அட்மின் மீடியா
0

இரயில் நிலையங்களில் பயண சீட்டு அளிக்கும் முகவர் வேலை வாய்ப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு Become An IRCTC Agent 

இரயில் நிலையங்களில், கமிஷன் அடிப்படையில், பயணிகளுக்கு முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை அளிக்கும் முகவரைத் (STBA) தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்களை வரவேற்க்கப்படுகின்றது

சேலம் ரயில்வே கோட்டத்தில் 29 ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முகவராகச் செயல்பட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ராசிபுரம்

தனிஷ்பேட்டை

கல்லூர் ரோடு

லாலாப்பேட்டை

புத்திரெட்டிப்பட்டி

மாயனூர்

சோமனூர்

மோகனூர்

தொட்டாம்பட்டி

பாளையம்

முத்தாசநல்லூர்

வீரராக்கியம்

மின்னாம்பள்ளி

ஊஞ்சலூர்

பெருந்துறை

வெலிங்டன்

மாவேலிப்பாளையம்

விஜயங்கலம்

வெள்ளியணை

தொட்டிப்பாளையம்

மல்லூர்

கலங்கை

அரவண்காடு

கேத்தி

மூர்த்திப்பாளையும்

லவடேல்

பேச்சேரி ரோடு

எலமலூர் 

ஆகிய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பயணச் சீட்டு முகவராக விரும்பும் இளைஞர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அந்த ரயில்நிலையம் அமைந்துள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,120 செலுத்த வேண்டும். மேலும், தொடர்புடைய ரயில் நிலையத்தின் பயணச் சீட்டு விற்பனைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் காப்புத் தொகை செலுத்த வேண்டும்.

நியமிக்கப்படும் முகவர்கள் ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். 

மேலும், கட்டணச் சலுகை பயண சீட்டுக்களை அந்தந்த ரயில் நிலைய மேலாளர் அனுமதியுடன் விற்பனை செய்யலாம்.

முக்கிய தேதிகள்

விண்ணப்ப படிவங்கள் விற்பளை /பதிவிறக்கம் தொடக்கம் நாள்:-

19.05.2026 அன்று 17.00 மணி

விண்ணப்ப படிவங்கள் விற்பனை /பதிவிறக்கத்திற்கான கடைசி நாள்:-

11.06.2026 (வியாழக்கிழமை) அன்று 10:00 மணி வரை'

விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்;-

11.06.2026 (வியாழக்கிழமை) அன்று 10:00 மணி முதல் 15.00 மணி வரை

கடைசி நாள்;- 

11.06.2026 (வியாழக்கிழமை) அன்று 15.30 மணி

ஒப்பந்தப்புள்ளி பற்றிய தகவல்களையும் கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் உடன் கூடிய ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தையும் அறிய பார்வையிடுங்கள் இணையதளம் www.sr.indianrailways.gov.in ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தை அந்த தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏதேனும் விசாரணைக்கும் ஐயப்பாடுகளுக்கும் கோட்ட இரயில்வே மேலாளர் அவர்கள் அலுவலகம், தெற்கு இரயில்வே, சேலம்-636 005-ல் உள்ள முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர், சேலம் கோட்டம், தெற்கு இரயில்வே அவர்கள் அலுவலகத்தை ஏதேனும் வேலை நாளில் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண். 0427-2431010



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback