Breaking News

லஞ்சம் கேட்டா உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..! CBI வெளியிட்ட அறிவிப்பு

அட்மின் மீடியா
0

லஞ்சம் கேட்டா உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..! CBI வெளியிட்ட அறிவிப்பு


தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் CBI-யிடம் புகார் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்காக சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் பிரத்யேக தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

புகார்களை தெரிவிப்பதற்காக 94444 42519 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும், hobacchn@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

லஞ்ச புகார்கள் குறித்து பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் CBI அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மத்திய அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார்களையும் இந்த வழிகளில் தெரிவிக்கலாம்.

இந்தப் புகார் வசதி குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புகார்களை தெரிவிக்க 

94444 42519 

hobacchn@cbi.gov.in மின்னஞ்சல் முகவரி

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback