Breaking News

இணையத்தில் வைரலாகும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - 4 நாளில் 1 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்கள் முழு விவரம் Cockroach Janta Party

அட்மின் மீடியா
0

இனையத்தில் வைரலாகும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - 4 நாளில் 1 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்கள் முழு விவரம் Cockroach Janta Party



இந்தியாவில் பல அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில், வெறும் ஐந்தே நாட்களில் 1 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது ஒரு 'மீம்' அரசியல் கட்சி. 


காக்ரோச் ஜனதா கட்சி

இன்ஸ்டாகிராமில் @cockroachjantaparty என்ற ஹேண்டிலில் இயங்கி வரும் இந்தக் கணக்கு, இன்று 10 மில்லியன் அதாவது ஒரு கோடி ஃபாலோயர்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லைக் கடந்தது. 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது இந்தியாவிலேயே 2வது அதிக பலோயர்ஸ் கொண்ட அரசியல் பக்கமாக இந்த கரைப்பான் பூச்சி பக்கம் இருக்கிறது. காங்கிரஸ் 13.2 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள நிலையில், காக்ரோச் ஜனதா கட்சிக்கு 10.3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அதன் பிறகே பாஜக 8.7 மில்லியன் ஃபாலோயர்கள் உடன் 3வது இடத்தில் வருகிறது.

கடந்த மே 16ம் தேதி தான் ஆரம்பித்தது. அதாவது 

மே 15ம் தேதி நடந்த ஒரு வழக்கின் விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த், இளைஞர்களைக் கரப்பான்பூச்சிகளைப் போல எனக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் பரவியது. 

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மே 16ம் தேதி தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு விளக்கத்தை அளித்தார். அதில் அவர், "போலி பட்டப் படிப்புகளுடன் சட்டத்துறையிலும், ஊடகத் துறையிலும் நுழைந்து ஒட்டுண்ணிகளைப் போலச் செயல்படுபவர்களைத் தான் நான் விமர்சித்தேனே தவிர, நாட்டின் இளைஞர்களை அல்ல" என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

எக்ஸ் பக்கத்திலும் கூட கிட்டத்தட்ட 2 லட்சம் ஃபாலோயர்கள் உடன் இந்த கரைப்பான் பூச்சி கட்சி பக்கம் வேகமாக வளர்ந்து வந்தது. இருப்பினும், திடீரென அதன் ட்விட்டர் பக்கம் இப்போது முடக்கப்பட்டுள்ளது. 

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பெயர் அபிஜித் தீப்கே.என தகவல்கள் வெளியாகி உள்ளது

ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப்பிரிவில் இடம் பெற்றிருந்தவர்தான், இந்த அபிஜித் தீப்கே. இந்த கட்சியை நிறுவியிருக்கும் அவர், வேலையில்லாத இளைஞர்களை கரப்பாம்பூச்சி என்று விமர்சித்த நிலையில் அவர்களுக்காக இந்த கட்சியை தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback