Breaking News

அரசு ஊழியர்கள் போல் பணிக்கு வரும் விஜய் - மதிய உணவை தனது இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் விஜய் ஆச்சர்யத்தில் அதிகாரிகள், மக்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

அரசு ஊழியர்கள் போல் பணிக்கு வரும் விஜய் - மதிய உணவை தனது இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் விஜய் ஆச்சர்யத்தில் அதிகாரிகள், மக்கள் முழு விவரம்


தனது இருக்கையிலேயே அமர்ந்து சாப்பிடும் முதல்வர் விஜய்: மதிய உணவை கையிலேயே எடுத்து வந்து தனது இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் தமிழ்நாடு முதல்வர் விஜய்.. நேரமின்மையாலும் அடுத்தடுத்து கூட்டங்கள் இருப்பதால் சில நேரங்களில் தனது முதல்வர் அலுவலக ஊழியர்களிடம் பேசியபடியே முதல்வர் விஜய் பேசி கொண்டே சாப்பிடுகிறார்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் ஒவ்வொரு நாளும் திட்டமிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க 30 நிமிடங்கள் முன்னதாகவே அலுவலகத்திற்கு வந்து விடுகிறார். 

தமிழ்நாடு முதல்வர் விஜய் மதிய உணவை அலுவலகத்திற்கு தனது கையோடு கொண்டு வந்து விடுகிறார். தொடர்ந்து அலுவல் பணிகளை மேற்கொள்கிறார். அலுவல் நேரங்களில் எந்த ஓய்வும் எடுப்பதில்லை. அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றார். இதனை அரசு அதிகாரிகள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கின்றனர்..

மதிய உணவை கையோடு கொண்டு வந்து தனது அறையில் உணவு சாப்பிட்டு ஒரு அரசு அலுவலர் போல தலைமைச் செயலகம் வந்து செல்கிறார் முதல்வர் விஜய். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

சட்டசபை நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் எம்.எல்.ஏக்கள் ட்தங்களது சொந்த தொகுதிகளுக்கு சென்று வழக்கமான பணிகளை செய்ய தொடங்கினர். அதேபோல் நேற்று முதல் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள விஜய் தலைமை செயலகம் வந்தார். 

அரசு ஊழியர் போல காலை 9.55 மணிக்கே தலைமை செயலகம் வருகை தந்த முதல்வர் விஜய், மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மதிய உணவையும் காலையிலேயே கையோடு கொண்டுவந்த அவர், தலைமை செயலகத்திலேயே தனது அறையிலேயே அமர்ந்து அதனை சாப்பிட்டார். பின்னர் மாலை 4 மணிக்கு தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.

இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா? என நெட்டிசன்கள் வியப்பாக கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback