திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 07-05-2026 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில்
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலினும்
துணைத் தலைவராக கே என் நேருவும்
கொறடாவாக ஏவா வேலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த திமுக வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார். அதுமட்டுமில்லாமல், கடந்த முறை அமைச்சராக இருந்த 31 பேரில் 15 பேர் தோல்வியடைந்தனர். துணை முதல்வராக இருந்த உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
