Breaking News

தவெகவிற்க்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அடுத்து என்ன நடக்கும்? முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகம் 110 -க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதில் கடும் இழுபறி நிலவுகிறது. 

ஒருவேளை தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், விஜய் ஒரு ‘கூட்டணி ஆட்சி’ அல்லது ‘வெளிப்படையான ஆதரவு’ அளிக்கும் சூழலுக்குத் தள்ளப்படலாம். 



குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கத்தை முன்வைத்தார் விஜய்

அதேசமயம், ஆளும் திமுக அல்லது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே இருப்பதால், சுயேச்சைகள் மற்றும் பிற சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட வாய்ப்புள்ளது

அப்படி நிரூபிக்க தவறிவிட்டால் ஆளுநர் அந்த ஆட்சியை கவிழ்த்து அடுத்த பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்புவிடுவார். அந்தக் கட்சி பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சி அமைக்கலாம். ஒருவேளை எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அரசியல் அமைப்பு விதி 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்குவரும். பிறகு மறுதேர்தல் நடத்தப்படும்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சிக்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகால அரசியலைத் தீர்மானிக்கும்.

எண்ணப்பட்ட 2.88 கோடி வாக்குகளில் 1 கோடிக்கும் மேல் வாக்குகளை பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மெஜாரிட்டிக்காக தவெக மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோர வேண்டும்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback