தொங்கு சட்டசபை (Hung Assembly) என்றால் என்ன வாங்க தெரிந்து கொள்ளலாம்
தொங்கு சட்டசபை (Hung Assembly) என்றால் என்ன வாங்க தெரிந்து கொள்ளலாம்
தொங்கு சட்டசபை (Hung Assembly) என்பது ஒரு மாநிலத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது முன் கூட்டியே அமைக்கப்பட்ட கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை (Majority) இடங்கள் கிடைக்காத சூழ்நிலை ஆகும்.
இச்சூழலில், ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்தபட்ச இடங்களை எந்தக் கட்சியும் எட்ட முடியாததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, தொங்கு சட்டசபை உருவாகிறது
234 இடங்கள் கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை, இந்த எண்ணிக்கையை எந்தக் கட்சியும் தனித்து பெறாத நிலை.ஆளுநரின் பங்கு: சட்டசபை தொங்கு நிலையிலிருக்கும்போது, ஆளுநர் அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்கலாம் அல்லது கூட்டணி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தலாம்.
தனிப்பெரும்பான்மை இல்லாததால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.மாற்று வழிகள்: பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில், ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைக்கலாம் அல்லது மீண்டும் தேர்தலைச் சந்திக்க நேரிடலாம்.
எந்த கட்சியும் 118 இடங்களை வெல்ல வில்லை, திமுக அல்லது அதிமுக அதற்கு நெருக்கமான இடங்களை கைப்பற்றியுள்ளன, தவெக ஆதரவளித்தால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் உண்டாகுமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி நடந்தால் இந்த தேர்தலில் விஜய் கிங் மேக்கராக உருவாக வாய்ப்புள்ளது.
தமிழக வெற்றி கழகம் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமில்லாமல் பல தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெல்லும் சூழலை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது எனவே தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யங்களை கொண்டதாக இருக்க போகிறது.
Tags: தமிழக செய்திகள்
