Breaking News

தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக எந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழுந்திருக்குனு தெரிந்து கொள்ள புதிய விவரத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக எந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழுந்திருக்குனு தெரிந்து கொள்ள புதிய விவரத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் boothwise election result 2026




2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்குப்பதிவு மைய வாரியான (Booth-wise) முடிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் results.eci.gov.in தெரிந்துகொள்ளலாம்.

"AC wise Form 20 details" என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி ஒவ்வொரு பூத்திலும் எந்தக் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது என்ற விவரத்தைப் பெறலாம்.

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவீதம் மற்றும் எவ்வளவு வாக்காளர்கள் எந்தெந்த கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர் என்ற புதிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கான 17வது சட்டமன்றத் தேர்தலை மார்ச் 15, 2026 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டியுடன் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவாக 85.15% வாக்குகள் பதிவாகி இருந்தன

ஏப்ரல் 29, 2026 அன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், நான்கு கணிப்புகள் திமுகவிற்கும், ஒரு கணிப்பு அதிமுகவிற்கும், ஒரு கணிப்பு தவெகவிற்கும் சாதமாக இருந்தது. இதையடுத்து, 

அதன்பிறகு, மே 04, 2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே வெளியிடப்பட்டன.இதில், தமிழக வெற்றிக் கழகம் தான் போட்டியிட்ட முதல் முறை தேர்தலிலேயே 108 இடங்களை தனிப்பெரும்பான்மையாக பெற்று வெற்றிப் பெற்றது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 73 இடங்களையும், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 53 இடங்களையும் வென்றன. 

பூத் வாரியான வாக்கு விவரங்களை அறியும் வழிமுறைகள்:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) முடிவுகள் இணையதளத்திற்குச் செல்லவும்: results.eci.gov.in.

தேர்தல் வகை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தல் 2026-ஐத் தேர்ந்தெடுக்கவும்.

தொகுதியைத் தேர்ந்தெடு: நீங்கள் தேடும் சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

Form 20-ஐப் பார்க்கவும்: அந்தத் தொகுதியின் முடிவுகள் பக்கத்தில், "AC wise Form 20 details" அல்லது "Booth-wise results" என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

பதிவிறக்கம்/பார்க்கவும்: அங்கே ஒவ்வொரு வாக்குச்சாவடி எண்ணுக்கும் (Booth No) எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன, நோட்டா (NOTA) வாக்குகள், செல்லாத வாக்குகள் என அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

தமிழக சட்டசபை தேர்தலில் 2026-ல், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளின் வாக்கு சதவீதம் மற்றும் எண்ணிக்கை விவரங்களை இந்த இணையதளத்தில் முழுமையாகக் காணலாம்.

உங்களுடைய தொகுதியில் எந்த பூத்தில் எந்த கட்சி எவ்வளவு வாக்கு வாங்கியது என்பதை கீழே உள்ள லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கில் "AC wise Form 20 details" என்ற ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளவும்

வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் முடிவுகள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

 https://www.elections.tn.gov.in/Form20_TNLA2026.aspx





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback