Breaking News

C. ஜோசப் விஜய் எனும் நான் - விஜய் பதவியேற்பு விழா..! நேரலையில் பார்க்க

அட்மின் மீடியா
0

C. ஜோசப் விஜய் எனும் நான் - விஜய் பதவியேற்பு விழா..! 


தமிழக முதல்வர் "ஜோசப் விஜய் என்னும் நான்" பதவியேற்பு விழா நேரலை

CLICK HERE

CLICK HERE

CLICK HERE

CLICK HERE

https://www.youtube.com/watch?v=LU6pe4lHB6k

https://www.youtube.com/watch?v=PDhzHyebtUE

https://www.youtube.com/watch?v=UH8aG3YrrhE

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது

ஆனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தேவைப்பட்டதால், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. 

த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய இரு கட்சிகள் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.

இதன் மூலம் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்ததை தொடர்ந்து, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களுடன் கவர்னரை சந்தித்த விஜய், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

மேலும், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை  ஏற்றுக்கொண்ட கவர்னர், த.வெ.க. தலைமையிலான அரசு இன்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். 

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கவர்னர் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 

இந்நிலையில், விஜய்யின் பதவியேற்பு விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழா நிகழ்விடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை விஜய் முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று விஜய் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், வரும் 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் விஜய் பதவியேற்பு விழா சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

கீழ்காணும் இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

1. அண்ணா நகர் டவர் பார்க்

2. வடபழனி பேருந்து நிலையம்,

3.சோளிங்கநல்லூர் சந்திப்பு ,

4. நாகேஸ்வரா பார்க்

5. சென்ட்ரல் ரயில் நிலையம்

6. பெசன்ட் நகர்

7. கத்திப்பாரா ஜங்ஷன்

8. தீவு திடல்

9. அண்ணா நகர் டேங்க்.

10.மெரினா பீச்

11. கோயம்பேடு

12.தி.நகர்

13.திருவான்மியூர் பஸ் டிப்போ

14.செம்மொழி பூங்கா

15.சோழிங்கநல்லூர் ஜங்ஷன்

16.மாதவரம் பஸ் டெர்மினல்

17.போரூர்

18.அம்பத்தூர்

19.தண்டையார்பேட்டை

20.அடையார் டிப்போ

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback