நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு Petrol, diesel prices hiked by Rs 3 per litre
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு Petrol, diesel prices hiked by Rs 3 per litre
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14-ம்,
டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11-ம் உயர்ந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன
ஈரான் போர் பதற்றத்தாலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இன்று அதிரடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
சென்னையை பொறுத்தவரை
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.67க்கும்,
டீசல் ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.93.14க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்
