போதை பொருள் விற்றால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: வங்கி கணக்கு முடக்கப்படும்: முதல்வர் விஜய் அதிரடி Tamil Nadu steps up the fight against drugs
போதை பொருள் விநியோகத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு படைக்கு, போதைப்பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கி புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. Tamil Nadu steps up the fight against drugs
தமிழக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் படைக்கு போதைப் பொருள் விற்போரின் சொத்துகளை முடக்கவும் பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முதல்வரும், தவெக தலைவருமான விஜய், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் போதைப் பொருளை ஒழிக்க போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தாா்.
இதை அமல்படுத்தும் விதமாக முதல்வராக விஜய், கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையொப்பமிட்டாா்.
முதல்வரின் இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக, போதைப் பொருள் தடுப்புப் படையை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், அந்தப் படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் தொடா்பான குற்றங்களைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட காவல் துறைகளிலும், அனைத்து மாநகர காவல் துறைகளிலும் போதைப் பொருள் தடுப்புப் படை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போதைப் பொருள் நடமாட்டம் குறித்த உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, போதைப் பொருள் விற்பனை குறித்து இணையதளம் மூலம் கண்காணிப்பது, வழக்குகளைப் பதிவு செய்வது, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோா், அவா்களது உறவினா்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்வது அல்லது முடக்கும் நடவடிக்கை எடுப்பது, நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டை பெற்றுக்கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவாா்கள் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்

