புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு - வெளியான மகிழ்ச்சியான செய்தி
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் சொன்ன தகவல்
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப் பொருள் வழங்கல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்
முதலமைச்சர் அனைத்து துறைகளுக்கும் சென்று அங்கு ஊழியர்களை சந்தித்து ஆய்வு மேற்கொள்ள சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில் இன்றைய தினம் என்னுடைய துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர்களை ஊக்குவிப்பதும் அவர்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்" என்றார்.
ஊழியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு வாரத்திற்குள் அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது மக்களுக்கான அரசு மக்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்யும் அரசு. எனவே மக்களின் கோரிக்கையை கிடப்பில் போடாமல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார்
மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கட்ராமன் உறுதியளித்தார்.
Tags: தமிழக செய்திகள்
