லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க; புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு..! என பரவும் செய்தி உண்மையா முழு விவரம் If you are asked for a bribe, file a complaint; Rs. 1 lakh reward for those who file a complaint..! Is the news that is spreading true?
லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க; புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு..! என பரவும் செய்தி உண்மையா முழு விவரம்
If you are asked for a bribe, file a complaint; Rs. 1 lakh reward for those who file a complaint..! Is the news that is spreading true?
பரவும் செய்தி:-
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் லஞ்சு ஒழிப்பு மற்றும் நிர்வாக தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன.இ
துகுறித்து வெளியான அறிக்கையில்,எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.r
புகார் அளிக்க அழைக்கவும் 1800 425 1555 (24×7 கட்டணமில்லா எண்),இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றே சொல்லலாம். இந்த அதிரடி அறிவிப்பு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
என சமூகவலைதளங்களிலும் பல மீடியாக்களிலும் செய்தி வெளியாகி உள்ளது
உண்மை என்ன:-
சமூக வலைதளம் மற்றும் சில ஊடகங்களில் மட்டுமே லஞ்சம் குறித்து புகார் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பவர்களுக்கு ₹1 லட்சம் பரிசு” என்று வைரலாக பரவும் தகவலுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ GO அல்லது தமிழ்நாடு அரசு அறிவிப்பும் வெளியாகவில்லை
மேலும் அதில் உள்ள நம்பருக்கு போன் செய்தால் போக வில்லை அந்த நம்பரை செக் செய்தால் காஜா பாம் கம்பணியோட toll free number என அவர்களது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்
https://www.kajahbalm.com/contact-us.html
Tags: FACT CHECK

