Breaking News

ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் என்ன என்ன வாங்க தெரிந்து கொள்ளலாம் முழு விவரம் Find out the full details of the new rules that will come into effect from June 1st.

அட்மின் மீடியா
0

ஜூன் மாதம் அமலுக்கு வரும் புதிய விதிகள் என்ன என்ன முழு விவரம் Find out the full details of the new rules that will come into effect from June 1st.




சிபிஎஸ்இ - மறு மதிப்பீடு தகவலுக்கு தனி இணையதளம் பிரத்யேக இணையதளம் ஜூன் 1 முதல் செயல்படத் தொடங்கும் - சிபிஎஸ்இ

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026 - 2027ம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் மீண்டும் ஜூன் 1ஆம் தேதி முதல் பெறப்படும்மாணாக்கர்களின் நலன் கருதி விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணாக்கர்கள் http://tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்- உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், NPCI புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. QR கோடு ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண் மூலமோ பணம் அனுப்பும்போது, பெறுநரின் வங்கிக் கணக்கில் பதிவாகியுள்ள முழு உறுதிப்படுத்தப்பட்ட பெயர் மட்டுமே திரையில் காட்டப்படும். இதற்கு முன்பு செல்லப் பெயர் அல்லது QR-ல் கொடுக்கப்பட்ட பெயர் காட்டப்பட்டது. இந்த மாற்றம் தவறான நபருக்கு பணம் செல்லும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். பயனர்கள் இனி பரிவர்த்தனை செய்யும் முன் பெயரை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் (IOC, BPCL, HPCL) LPG விலையை மறுபரிசீலனை செய்கின்றன. ஜூன் மாதத்திலும் விலை உயர்வு அல்லது குறைவு ஏற்படலாம். 

PAN கார்டு விதிகளில் தளர்வு மற்றும் கட்டுப்பாடு: வருமான வரித்துறை PAN விதிகளை மாற்றியுள்ளது. ரூ.50,000-க்கு மேல் கேஷ் டெபாசிட் செய்யும்போது PAN கட்டாயம் இல்லை. சொத்து பரிவர்த்தனையில் முன்பு ரூ.10 லட்சம் வரை இருந்த வரம்பு இப்போது ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.45 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்கள் கண்டிப்பாக PAN கொடுக்க வேண்டும். PAN இல்லாதவர்கள் இனி Form 97-ஐ பயன்படுத்தலாம் (முன்பு Form 60). இந்த மாற்றங்கள் வரி ஏய்ப்பைத் தடுக்க உதவும்.

Give Us Your Feedback