Breaking News

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு வங்கி ஒருங்கிணைப்பாளர் வேலை வாய்ப்பு - 1200 காலியிடங்கள் - உங்கள் ஊரிலேயே உங்களுக்கு வேலை - முழு விவரம் TNSRLM Recruitment 2026 Community Bank Coordinator Vacancy

அட்மின் மீடியா
0

12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு வங்கி ஒருங்கிணைப்பாளர் வேலை வாய்ப்பு - 1200 காலியிடங்கள் - உங்கள் ஊரிலேயே உங்களுக்கு வேலை - முழு விவரம் TNSRLM Recruitment 2026 Community Bank Coordinator Vacancy




தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(TNSRLM) சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு பெற்றுத் தருதல் மற்றும் வாராக்கடன் வசூல் செய்தல், நிதிகல்வி அளித்தல். காப்பீடு திட்டங்களின் சேவைகள் வழங்குதல். மின்னணு நிதி சேவை வழங்குதல், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தனிநபர் தொழில்கடன் பெற வழிவகை செய்தல் ஆகிய பணிகளுக்காக தமிழகம் முழுவதும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள்(CBC) பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கான(CBC)தகுதி விவரம்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் சமுதாயம் சார்ந்த அமைப்பு பணியாளராகவோ அல்லது தனியார் நிறுவனங்களில் முழு நேரப்பணியாளராக பணி இருத்தல் கூடாது.

தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சார்ந்தவராக இருத்தல் அவசியம்.

மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும். (உரிய தகுதிகளுடன் இலக்கு மக்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில், பிற விண்ணப்பதாரர்களை கருத்தில் கொள்ளலாம்).

மலைப்பகுதியிலுள்ள ஆதிவாசிகள் குடியிருப்புகளில் மேற்கூறிய உறுப்பினர் இல்லாத நிலையில் ஆண் உறுப்பினரை மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு ஒப்புதலுடன் தேர்வு செய்யலாம்,

விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும்.

12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

வாராக்கடன் உள்ள குழுவின் உறுப்பினராக இருக்க கூடாது.

மலைப்பகுதிகளில் 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாத நிலையில் 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதர தகுதிகளுடன் இருப்பின் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் தகுதியுடையவர்களாக கருதப்படலாம்.

தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

கணினி திறன் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ள இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

ஆண்ட்ராய்டு (Android) கைபேசி வைத்திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் Whatsapp-ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.

மதிப்பூதிய விபரம் :

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திலிருந்து மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு விடுவிக்கப்படும் மாதாந்திர அடிப்படை மதிப்பூதியம் ரூ.2,500/-ஐ சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் சார்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் வழங்கப்படும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 03.06.2026.


Ariyalur 

https://ariyalur.nic.in/

Chengalpattu

https://chengalpattu.nic.in/

Chennai 

https://chennai.nic.in/

Coimbatore 

https://coimbatore.nic.in/

Cuddalore

https://cuddalore.nic.in/

Dharmapuri 

https://dharmapuri.nic.in/

Dindigul 

https://dindigul.nic.in/

Erode

https://erode.nic.in/

Kallakurichi 

https://kallakurichi.nic.in/

Kancheepuram 

https://kancheepuram.nic.in/

Kanyakumari

https://kanniyakumari.nic.in/

Karur 

https://karur.nic.in/

Krishnagiri

https://krishnagiri.nic.in/

Madurai

https://madurai.nic.in/

Nagapattinam &Mayiladuthurai

https://www.nagapattinam.nic.in/

Namakkal 

https://namakkal.nic.in/

Nilgiris

https://nilgiris.nic.in/

Perambalur

https://perambalur.nic.in/

Pudukottai 

https://pudukkottai.nic.in/

Ramanathapuram

https://ramanathapuram.nic.in/

Ranipet 

https://ranipet.nic.in/

Salem

https://salem.nic.in/

Sivagangai 

https://sivaganga.nic.in/

Tenkasi

https://tenkasi.nic.in/

Thanjavur

https://thanjavur.nic.in/

Theni 

https://theni.nic.in/

Thirupathur 

https://tirupathur.nic.in/

Thiruvallur

https://tiruvallur.nic.in/

Thiruvannamalai 

https://tiruvannamalai.nic.in/

Thiruvarur 

https://tiruvarur.nic.in/

Thoothukudi 

https://thoothukudi.nic.in/

Tirunelveli 

https://tirunelveli.nic.in/

Tiruppur 

https://tiruppur.nic.in/

Trichy 

https://tiruchirappalli.nic.in/

Vellore

https://vellore.nic.in/

Villupuram 

https://viluppuram.nic.in/

Virudhunagar 

https://virudhunagar.nic.in/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback