Breaking News

குர்பானிக்கு கடும் கட்டுப்பாடு.. விதிகளை மீறினால் கிரிமினல் நடவடிக்கை டெல்லி அரசு கடும் எச்சரிக்கை Strict restrictions on Gurbani.. Criminal action if rules are violated, strict warning to Delhi government

அட்மின் மீடியா
0

பக்ரீத் பண்டிகையையொட்டி தடை செய்யப்பட்ட விலங்குகளைப் பலியிட்டால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரித்துள்ளது.  Strict restrictions on Gurbani.. Criminal action if rules are violated, strict warning to Delhi government



வரவிருக்கும் (மே 28) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தேசிய தலைநகரான டெல்லி முழுவதும் விலங்கு பலியிடுதல், கழிவு அகற்றுதல் மற்றும் விலங்கு விற்பனை ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் வகையிலான கடுமையான வழிகாட்டுதல்களை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

டெல்லி அரசின் அமைச்சர் கபில் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் உள்ளிட்ட சட்டப்படி தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், தெருக்கள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள், திறந்தவெளி இடங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விலங்குகளை பலியிடுவதற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குர்பானி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலுக்கும் அனுமதி வழங்கப்படாது” என்று தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, டெல்லி காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினருக்கும் அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்படுவதுடன், சட்டவிரோத விலங்கு சந்தைகள் மற்றும் அனுமதியற்ற பலியிடும் இடங்களை கண்டறிய சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்து உள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback