Breaking News

தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அட்மின் மீடியா
0
விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார்.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ஆம் ஆண்டு எனக்கு தெரியவந்தது.

இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது.இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம் - விவாகரத்து கோரிய மனுவில் சங்கீதா தெரிவிப்பு.

இந்த மனு 73-ஆவது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

லண்டனில் பிறந்து வளர்ந்த இலங்கை பூர்வீகத்தை கொண்ட சங்கீதா, ஆரம்பத்தில் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து பின்னர் வாழ்க்கைத் துணையாக மாறினார். 1996ஆம் ஆண்டு ‘பூவே உனக்காக’ வெற்றிக்குப் பிறகு சென்னை வந்த அவர், படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்தது இவர்களின் உறவுக்கு தொடக்கமாக அமைந்தது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் 1999 ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்து மற்றும் கிறிஸ்தவ முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சஞ்சய் வெளிநாட்டில் திரைப்படக் கல்வி முடித்து இயக்குநராக அறிமுகமாக உள்ளார். திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார். 

விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சியில் சங்கீதா முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.கடந்த சில காலமாக சங்கீதா பொதுநிகழ்ச்சிகளில் காணப்படாதது சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது. 
இந்நிலையில், விவாகரத்து மனுவில் திருமணத்தை மீறிய உறவு குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback