Breaking News

ரூ.2,000க்கு மேலான UPI வணிக பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு எதற்கெல்லாம் கட்டணம், முழு விவரம் UPI business transactions above Rs. 2,000 will be charged, announces

அட்மின் மீடியா
0
ரூ.2,000க்கு மேலான UPI வணிக பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு எதற்கெல்லாம் கட்டணம், முழு விவரம் UPI business transactions above Rs. 2,000 will be charged, announces



ரூ.2,000க்கு மேலான UPI வணிக பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு


ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக (Merchant) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15 முதல் 0.4% வரை கட்டணம் (MDR) வசூலிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த கட்டணம் தனிநபர் பயனர்களுக்குப் பொருந்தாது.


சாமானியர்களுக்கு இலவசம்: தனிநபர்கள் இடையே செய்யப்படும் (Person-to-Person - P2P) பணப் பரிவர்த்தனைகளுக்கு எப்போதும் கட்டணம் கிடையாது

வணிகர்களுக்கான கட்டணம்: ரூ.2,000-க்கு மேல் கடைகள் அல்லது வணிக நிறுவனங்களுக்குச் செய்யப்படும் யுபிஐ செலுத்தல்களுக்கு அதிகபட்சம் 0.4% கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே வசூலிக்கப்படும்.

ரயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் எரிபொருள் போன்ற துறைகளில் ரூ.2,000-க்கு மேல் செய்யும் பரிவர்த்தனைக்கு நிலையான ரூ. 5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறு வணிகர்களுக்கு விலக்கு: க்யூஆர் (QR) கோடு மூலம் மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சிறு வணிகர்களுக்கு இந்தக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்து.

இந்தக் கட்டணத்தை வணிகர்கள் நுகர்வோர் மீது திணிக்கக் கூடாது என்றும், யுபிஐ செயலிகள் பிளாட்ஃபார்ம் கட்டணம் (Platform Fee) வசூலிக்கக் கூடாது என்றும் அரசு தடை விதித்துள்ளது.

பொருட்களை வாங்கிவிட்டு வணிகர்களுக்கு UPI மூலம் பரிவர்த்தனைகளுக்கு குறைந்த அளவிலான கட்டண விகிதத்தை NPCI எனப்படும் National Payment Corporation of India அறிவித்துள்ளது.

அதன்படி ரூ.2000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான கட்டணங்களையும் வங்கிகளோ வியாபாரிகளோ வசூலிக்க கூடாது.

ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 0.04% என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

இது தவிர ஒரு தனிநபர் மற்றொரு(P2P Person to Person) தனி நபருக்கு மேற்கொள்ளும் UPI பரிவர்த்தனைக்கு எத்தனை லட்சம் செலுத்தினாலும் அதற்கு எந்தவிதமான கட்டணம் கிடையாது.

0.04% கட்டண விகிதம் என்பது கடையில் பொருட்களையோ சேவைகளையோ பெற்றுக் கொண்டு வணிகர்களுக்கு UPI மூலம் மட்டுமே இது பொருந்தும்.

உதாரணத்திற்கு கடையில் 10,000 ரூபாய் பொருள் வாங்கிவிட்டு UPI மூலம் பணம் செலுத்தினால் அதற்கு 4 ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்தக் கமிஷன், வங்கிகள் மற்றும் செயலி வழங்குநர்கள் உள்ளிட்ட Payment System  பங்காளிகளிடையே பகிர்ந்துகொள்ளப்படும்.

75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கான MDR கட்டணம் அதிகபட்சம் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback