Breaking News

இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தலைமைக் கழக அறிவிப்பு

கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - 2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 6.10.2026 அன்று நடைபெற உள்ள, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், (35) மதுராந்தகம் (தனி), திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், (101) தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுராந்தகம் (தனி) (35)

: திருமதி கணிதா சம்பத், Ex. M.L.A., அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர்

தாராபுரம் (தனி) (101)

: திருமதி K. பானுமதி, B.A., அவர்கள் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு 12-வது வார்டு முன்னாள் உறுப்பினர்

எடப்பாடி K. பழனிசாமி கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்

Give Us Your Feedback