150 ஆண்டுகளில் காணப்படாத வானிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வலுவடைந்த சூப்பர் எல் நினோ - அதன் பாதிப்பு எப்படி இருக்கும் Super El Nino
சூப்பர் எல் நினோ - வானிலை மாற்றத்தால் இந்தியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் Sentinel-6 செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது!
இது Super El Nino தொடங்கியதன் அறிகுறி, இதனால் உலக வானிலை தலைகீழாக மாறும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை. குறிப்பாக 1997-98 காலக்கட்டத்தைப் போலவே உலகில் பெரு வெள்ளமும், கடும் வறட்சியும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல்-நினோ (El Niño) நிகழ்வு, கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் காணப்படாத மிக வலுவானதாக மாறக்கூடும் என சீன வானிலை நிர்வாகம் (CMA) எச்சரித்துள்ளது.
உலக வானிலை அமைப்பு
உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட அறிக்கையின்படி, 2026-2030 காலத்தில் உலக வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டும். 2027-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே அதிக வெப்பமான ஆண்டாக மாறக்கூடும் என 86 சதவீதம் சாத்தியம் கணிக்கப்பட்டுள்ளது.இதனால், உலகம் முழுவதும் வேளாண்மை, நீர் வளங்கள், ஆற்றல் உற்பத்தி ஆகியவை கடுமையாக பாதிக்கப்படலாம். விஞ்ஞானிகள், எல்-நினோவின் தாக்கம் முழுமையாக வெளிப்படுவதற்கு 6-12 மாதங்கள் ஆகும் என எச்சரிக்கின்றனர்.
சூப்பர் எல் நினோ (Super El Niño) என்றால் என்ன:-
பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகை பகுதியில் கடல் நீர் சராசரியை விட 2° செல்சியஸ் அல்லது அதற்கு மேல் வெப்பமடைகிறது.இது சாதாரண எல் நினோ நிலையை விட மிகவும் தீவிரமான மற்றும் சக்திவாய்ந்த காலநிலை நிகழ்வு ஆகும்
அதாவது பசிபிக் பெருங்கடலில் கடல் நீர் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் அதீத அதிகரிப்பு சூப்பர் எல் நினோ (Super El Niño) என அழைக்கப்படுகிறது.
இதன் முக்கிய தாக்கங்கள்
உலகளவில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயரும்.
சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், நீர் தட்டுப்பாடும் ஏற்படும்.
சில இடங்களில் திடீர் தீவிர வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி அபாயம் அதிகரிக்கும்.
விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும்.
இந்தியாவில் இதன் தாக்கம்:-
இந்தியாவில் பருவமழை பலவீனமடைய வாய்ப்பuள்ளது.இதனால் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு மற்றும் கடும் வெயில் தாக்கம் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது
இந்தச் சூப்பர் எல் நினோ வீரியமடைவது உலகளாவிய அளவில் பருவமழை மாற்றங்கள், கடும் வறட்சி மற்றும் வழக்கத்திற்கு மாறான புயல் போன்ற தீவிர வானிலை மாறுபாடுகளுக்கு வழியமைக்கும்.இதன்காரணமாக ஏற்படக்கூடிய சர்வதேச வானிலை தாக்கங்களை வல்லுநர்கள் மற்றும் வானிலை மையங்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
தனியார் வானிலை ஆய்வாளர்
பசிபிக்பெருங்கடலில் நிலவும் எல் நினோ நிகழ்வு சூப்பர் எல் நினோ வாக வலுப்பெற்றது; ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் எல் நினோ உருவாவது இதுவே முதல் முறை இந்த சூப்பர் எல் நினோ வரும் நவம்பர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 3.5° © மேல் தீவிரமடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்
தமிழக அரசின் நடவடிக்கை
சூப்பர் எல்-நினோ பாதிப்பை சமாளிக்க மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.340 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27யில் சூப்பர் எல்-நினோ பாதிப்பை எதிர்கொள்ளவும், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் கால்நடை தீவனப் பாதுகாப்பிற்காகவும் மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ₹340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
