Breaking News

பிறப்பு, இறப்பு பதிவு விதிகளில் புதிய மாற்றம்! அக்.1 முதல் அமல் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பிறப்பு, இறப்பு பதிவு விதிகளில் புதிய மாற்றம்! அக்.1 முதல் அமல் 

பிறப்பு, இறப்பு பதிவில் தாமதத்தைத் தடுக்க ஒழுங்குமுறைகளைக் கடுமையாக்கும் வகையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டம் வரும் அக்.1-ஆம் தேதி முதல் அமலாகவுள்ளது. இது தொடா்பான அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது.



பிறப்பு மற்றும் இறப்பு பதிவில் தாமதம் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவு திருத்தச் சட்டம் 2026, அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஒரு ஆண்டுக்கு மேல், 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்பட வேண்டுமெனில், மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக மாஜிஸ்திரேட்டின் உத்தரவு தேவைப்படும்.மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பு அல்லது இறப்பு குறித்த தகவல்களின் சரியான தன்மையை சரிபார்த்த பின்னரே பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணமும் செலுத்த வேண்டும்.

பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாக பதிவு செய்ய விண்ணப்பிக்கும்போது, முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் (Judicial Magistrate First Class) உத்தரவு கட்டாயமாகிறது. இதன் மூலம் நீண்ட கால தாமதமான பதிவுகளுக்கு கூடுதல் நீதித்துறை ஆய்வு கொண்டுவரப்படுகிறது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு தொடர்பான இந்த புதிய விதிகள் 2026 அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும். வழங்கப்படும் 

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சம்பந்தப்பட்ட நிகழ்வை சட்டரீதியாக நிரூபிப்பதற்கான முக்கிய ஆவணங்களாக உள்ளன.எனவே பிறப்பு அல்லது இறப்பை தாமதப்படுத்தாமல் உரிய காலத்திலேயே பதிவு செய்வது முக்கியமானதாகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback