மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது திமுக
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது திமுக
தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இவற்றில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்துள்ளது.
அக்.6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களை அடையாளம் காணும் பணிகளை தொடங்கி உள்ளது. விருப்ப மனு விநியோகத்தையும் அதிமுக நடத்தி வருகிறது
இந்நிலையில் இடைத்தேர்தலில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், முன்னணி பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்.9) ஆலோசனை நடத்தினார்.
மேலும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் அதன்படி
தாராபுரம் இடைத்தேர்தல் - திமுக சார்பில் எஸ்.சுகன்யா போட்டி!
மதுராந்தகம் இடைத் தேர்தல் திமுக வேட்பாளார் பரந்தாமன்!
Tags: அரசியல் செய்திகள்
