Breaking News

விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற விளம்பர பேனர் வைத்த பிரியாணி கடை உரிமையாளர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற விளம்பர பேனர் வைத்த பிரியாணி கடை உரிமையாளர் கைது முழு விவரம் 


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ₹99-க்கு அரபிக் ஸ்டைல் சிக்கன் 65 பிரியாணி வழங்கப்படும் என்ற விளம்பரத்தில், விநாயகர் பிரியாணி சமைப்பது அல்லது கார்னிஷ் செய்வது போன்ற படம் இடம்பெற்றிருந்தது.

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். காவல்துறையினர் உடனடியாக அந்த பேனரை அகற்றிவிட்டு, கடையின் உரிமையாளரான ஜெயந்த் (30) என்பவரைக் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படுவதாக விளம்பர பேனர் வைக்கப்பட்டது. 

அதில் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன.

திருநெல்வேலி மாநகரம் வி.எம். சத்திரம் பாலம் அருகே உள்ள கடை ஒன்றில், விநாயகர் சிலை பிரியாணி சமைப்பது போன்ற தோற்றத்தில் இடம்பெற்றிருந்த விளம்பர பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விளம்பரம் அமைந்துள்ளதாகக் கூறி, பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் இந்த விளம்பரம் இணையத்தில் வைரல் ஆனது மேலும் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல்துறையினர், சம்பந்தப்பட்ட விளம்பர பேனரை அகற்றினர். 

மேலும், விளம்பரம் தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த நெல்லை வி.எம்.சத்திரம் மேம்பாலம் பகுதியில் பிரியாணி கடை விளம்பரத்தில் விநாயகர் படத்தை வைத்த உரிமையாளர் ஜெயந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback