Breaking News

வங்கி ஊழியர்கள் 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்...! 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடல்..!! முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

 வங்கி ஊழியர்கள் 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்...! 4 நாட்கள் வங்கிகள் மூடல்..!!


நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராமிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்

இந்த வேலை நிறுத்தத்தையொட்டி வங்கிகள் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

11.09.2026 (வெள்ளிக்கிழமை) வேலை நிறுத்தம் வங்கிகள் முழுமையாக மூடப்படுகிறது. 

12.09.2026 (சனிக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். 

13.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறையாகும். 

14.09.2026 (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையாகும்.

3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வங்கிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வார இறுதி நாள் தொடங்கி வாரத்தின் முதல் நாள் வரை 4 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் சேவை கடுமையாக பாதிக்கப்படும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback