Breaking News

தீப்பற்றி எரிந்த பிரசவ வார்டில் உயிரைப் பணையம் வைத்து பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

தீப்பற்றி எரிந்த பிரசவ வார்டில் உயிரைப் பணையம் வைத்து பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர் வைரல் வீடியோ



மஹாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜிநகரின் ஆகாஷ்வானி பகுதியில் உள்ள ஆசியன் மருத்துவமனையின் பிரசவ வார்டில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

இதனைக் கண்ட செவிலியர்கள், சிறிதும் பதற்றம் அடையாமல், 9 பச்சிளம் குழந்தைகளை உடனடியாக வெளியேற்றி, பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றினர். மேலும், ஐசியூ உள்பட மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 58 நோயாளிகளையும் உஷார்படுத்தி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீவிபத்து ஏற்பட்ட போதும், சாமர்த்தியமாக செயல்பட்டு பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/publicvaninews/status/2095802995212730416

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback