செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்ன என்ன !
செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்ன என்ன !
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல்
வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் ஈட்டி, கணக்குத் தணிக்கை (Audit) செய்யத் தேவையில்லாத தனிநபர்கள் (AY 2026-27) தங்கள் ஐ.டி.ஆரை (ITR-3, ITR-4) ஆகஸ்ட் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறவிட்டால் அபராதத்துடன் கூடிய காலதாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.
போர்டிங் பாஸ் முத்திரை
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகள் குடிவரவு கவுன்டர்களில் தங்கள் போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்த வேண்டிய அவசியம் இல்லை.
பயணிகள் இனி தங்கள் மொபைல் ஃபோனில் உள்ள மின்னணு போர்டிங் பாஸையோ அல்லது அச்சிடப்பட்ட பிரதியையோ காண்பிப்பதன் மூலம் குடிவரவு செயல்முறையை முடிக்க முடியும். அதிகாரிகள் போர்டிங் பாஸில் முத்திரை குத்த மாட்டார்கள்.
எல்பிஜி இ-கேஒய்சி
எல்பிஜி எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் பயனாளர்கள் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் தங்களது எல்பிஜி இணைப்புக்கான இ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை முடிக்கத் தவறியவர்களுக்கு, அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய திரைப்படங்கள்:-
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் வெளியாகாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புதிய திரைப்படங்கள் வெளியாகி, 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும், வருகிற செப். 1 முதல் வெளியாகும் படங்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி-யில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்குகளில் படங்களை வெளியிடுவோம் என்றும் முடிவெடுத்துள்ளனர்.
தங்கம் & வெள்ளி ETF: Gold/Silver ETF-களின் விலை நிர்ணயம் மற்றும் வர்த்தக முறையில் SEBI மாற்றங்களை அமல்படுத்துகிறது.
Mutual Fund விதி: Mutual Fund நிறுவனங்கள் Intraday borrowing-ஐ சில கூடுதல் நோக்கங்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்கும் புதிய SEBI விதி அமலுக்கு வருகிறது.
Demat / Mutual Fund Nomination: செப்டம்பர் 1 முதல் புதிதாகத் திறக்கப்படும் single-holder demat accounts மற்றும் mutual fund folios-க்கு nomination கட்டாயம்.
Tata Motors விலை உயர்வு: Tata Motors-ன் கார்கள் மற்றும் SUV-களின் விலை ₹25,000 வரை செப்டம்பர் 1 முதல் உயர்கிறது.
Tags: தமிழக செய்திகள்
