சவூதியின் மெக்கா பள்ளிவாசலில் தவறான செயல்.. வங்கதேசத்தை சேர்ந்த 2 பேருக்கு மரண தண்டனை
சவூதியின் மெக்கா பள்ளிவாசலில் தவறான செயல்.. வங்கதேசத்தை சேர்ந்த 2 பேருக்கு மரண தண்டனை
சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள மசூதி ஒன்றில் புனிதத்தன்மையை மீறி ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. Saudi Arabia has executed two Bangladeshi nationals in Makkah after a court convicted them of committing a sexual immoral act inside a mosque.
தண்டனை பெற்றவர்கள்: நஜ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிதி அக்தர் ஆகிய வங்கதேச தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.காரணம் மக்கா மசூதியில் புனிதத்தன்மைக்கு எதிராகவும், ஒழுக்கக்கேடான முறையிலும் நடந்துகொண்டது குற்றச்சாட்டாகப் பதிவு செய்யப்பட்டது.
மெக்கா நகரில் உள்ள பள்ளிவாசலில் முறைகேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இதற்கிடையே சவுதி உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சவுதி அரேபியாவின் மெக்கா பகுதியில் உள்ள மசூதியில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு அரசு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மெக்கா பிராந்தியத்தில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மசூதிக்குள் இருவரும் என்ன செய்தார்கள் என்பது குறித்து சவுதி அதிகாரிகள் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. சம்பவம் நடந்த மசூதியின் பெயர், இருவரும் எப்போது கைது செய்யப்பட்டனர் என்பன போன்ற தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இந்தத் தண்டனை குறித்து வங்கதேச அரசுக்கு எந்தவித முன் தகவலும் தெரிவிக்காமல் ரகசியமாக நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்து, அந்நாட்டு அரசு சவுதி அரேபியாவுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு டாக்காவில் உள்ள சவுதி அரேபியத் தூதரை நேரில் வரவழைத்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரக ரீதியான ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன், சர்வதேச நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
முன் அறிவிப்பின்றி வெளிநாட்டு குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இந்த விவகாரம், தற்போது சவுதி அரேபியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
