Breaking News

20 ம் தேதி வரை எந்த எந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை இதோ

அட்மின் மீடியா
0

தென்மேற்கு பருவமழை இன்று, (15-10-2026) நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகியது. அதே நேரத்தில், வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக


வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா & மாஹே ஆகிய பகுதிகளில் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரா & தெற்கு ராயலசீமா பகுதிகளில் அநேக இடங்களில் (Fairly widespread) மழை பெய்துள்ளது.

தமிழ்நாடு & காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும், தமிழகம், புதுவை மற்றும் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பதிவாகியுள்ளது.

16-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். புதுக்கோட்டை, ராணிப்பேட்டை கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

17-10-2026:  ம் தேதி

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

18-10-2026: ம் தேதி

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

19-10-2026: ம் தேதி

நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

20-10-2026: ம் தேதி

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback