Breaking News

தொடர் விடுமுறை, எந்தெந்த மாவட்டங்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் செல்லும் முழு விவரம்

அட்மின் மீடியா
0
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தொடர் விடுமுறை, எந்தெந்த மாவட்டங்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் முழு விவரம்

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் . ஆயுத பூஜையையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் 18- ஆம் தேதி வரையும், தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 5- ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரையும் சென்னையில் 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்பட 6 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

புதுச்சேரி, சிதம்பரம், கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

சிஎம்டிஏ காலனி பூங்கா அருகே கிளாம்பாக்கம்

வந்தவாசி, வேலூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம்

கும்பகோணம், தஞ்சாவூர், நாகை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்; மொத்தமாக 106 பேருந்துகள் அங்கிருந்து இயக்கு திட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம் செல்வதற்கு 45 இலவச மாநகர பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

கிழக்கு கடற்கரைச் சாலை, வேலூர், பெங்களூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்

Give Us Your Feedback