தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு
உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதன் விபரம்:
உள்துறை செயலாளராக இருந்த மணிவாசன் நில நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிட்கோ நிர்வாக இயக்குனராக இருந்த கார்த்திக் ஐஏஎஸ்உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!தமிழ்நாடு அரசின் முக்கியத் துறைகளில் பணியாற்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் அந்த அரசாணையில், ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் கே. மணிவாசன் ஐஏஎஸ், நில நிர்வாக ஆணையராக (Commissioner, Land Administration) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (TANSIDCO) முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர், மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஏ. கார்த்திக் ஐஏஎஸ்,உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி வந்த வி. அருண் ராய் ஐஏஎஸ், நிதித்துறையின் செலவினச் செயலாளராக (Secretary to Government – Expenditure) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறையின் செலவினச் செயலாளராகப் பணியாற்றி வந்த என். வெங்கடேஷ் ஐஏஎஸ், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள்
