மகளிர் வெற்றி பயண திட்டம் எந்த எந்த பேருந்தில் பயணிக்கலாம் முழு விவரம்
மகளிர் வெற்றி பயண திட்டம் எந்த எந்த பேருந்தில் பயணிக்கலாம் முழு விவரம்
தமிழகத்தில் பெண்களின் இலவசப் பேருந்து பயணத்தை விரிவுபடுத்தி வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் 2, 2026 அன்று முதலமைச்சர் விஜய் சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார்.
அனைத்துப் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் இத்திட்டத்தின் மூலம் கட்டணமின்றிப் பயணிக்கலாம்.
அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வகையில் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்.2-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆக.24-ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் விழுப்புரம் கோட்டத்தின் புறநகர் சாதாரணப் பேருந்தில் இருந்த பெண் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை வழங்கினார். ஒவ்வொரு பயணியிடமும் எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்டு டிக்கெட்டுகளை வழங்கினார்.
அனுமதிக்கப்பட்ட பேருந்துகள்
மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் சாதாரணக் கட்டணப் பேருந்துகள்,
எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகள்
.மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யப் புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகள்
அனுமதிக்கப்படாத பேருந்துகள்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) இயக்கும் நீண்ட தூர சொகுசுப் பேருந்துகள், குளிர்சாதன (AC) பேருந்துகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
மேலும் பேருந்துகளை பெண்கள் எளிதில் அடையாளம் காண டிஜிட்டல் பலகைகளில் வெற்றி பயணம் என குறிப்படிப்பட்டிருக்கும்
Tags: தமிழக செய்திகள்
