Breaking News

நடுவானில் பரபரப்பு கத்தி குத்து காயங்களுடன் உயிரைப் பணயம் வைத்து 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!...

அட்மின் மீடியா
0

நடுவானில் பரபரப்பு கத்தி குத்து காயங்களுடன் உயிரைப் பணயம் வைத்து 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி!...




ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு (செப். 30) காலை 174 பயணிகளுடன் புறப்பட்ட ஃபிளை துபை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவழியில் சௌதி அரேபியாவின் தபூக் நகரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்தபோது அதை இயக்கிய விமானி ஒருவர் சக விமானியைக் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றதாகவும், அதை எதிர்த்து அவர் சண்டையிட்டதால் விமானம் வேகமாக கீழே சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வேறு இரண்டு விமானிகள் அந்த விமானத்தை இயக்கி சௌதியில் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர். மேலும், விமானி கத்தியால் குத்தித் தாக்கப்பட்டதில் அவர் விமானத்துக்குள் ரத்த வெள்ளத்தில் இருக்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்தத் தாக்குதலை நடத்திய விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், தாக்குதலுக்குள்ளாகி அவரை எதிர்த்து சண்டையிட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, உதவி விமானி விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்து சதித்திட்டம் தீட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது.இதனைத் தடுக்க முயன்ற கேப்டன் ஸ்மித் மச்சாரை, உதவி விமானி கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது.கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த போதிலும், அவர் எதிர்த்து போராடினார், தாக்குதலை முறியடித்தார், காக்பிட் கதவை திறந்தார்; இதன் மூலம் பயணிகளும் பணியாளர்களும் தாக்குதல் நடத்தியவரை அடக்க முடிந்தது - இதனால் வானில் நிகழவிருந்த பெரும் பேரழிவு தடுக்கப்பட்டது," 

இரத்தக் காயங்களுடன் பேசக்கூட முடியாத நிலையில் இருந்தபோதும், மன உறுதியை இழக்காமல் போராடி உதவி விமானியின் முயற்சியை முறியடித்து பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளார்.

அந்த விமானத்தின் கேப்டனாக பணியாற்றியவர் ஸ்மித் மச்சார். இந்திய நாட்டை சேர்ந்தவரான அவர், மும்பை நகரின் கத்கோபர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஆவார். துபாயில் வேலைக்காக வசித்து வந்துள்ளார். 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback