கொதிக்கும் சாம்பார் அண்டாவுக்குள் விழுந்த பெண்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கே.எல்.ராவ் நகர் பகுதியில் அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உணவு சமைக்கும் பணியில் அப்பகுதியை சேர்ந்த பலர் ஈடுபட்டனர். அதில் மத்தி சுஜாதா (வயது 46) என்ற பெண்ணும் சமையல் பணியில் ஈடுபட்டார்.
அதன்படி, சாம்பார் குழம்பு வைத்தப்பின் அதை அடுப்பில் இருந்து சாம்பார் அண்டாவை கீழே இறக்கி வைத்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தடுமாறிய சுஜாதா கொதிக்கும் சாம்பார் அண்டாவுக்குள் விழுந்தார்.
இதில் அவரின் முகம் உள்பட உடல் பாகங்களில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சுஜாதா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2102591309509005717
Tags: வைரல் வீடியோ
