முதலமைச்சர் விஜய்க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு முழு விவரம்
முதலமைச்சர் விஜய்க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு முழு விவரம்
முதலமைச்சர் விஜய் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்உச்ச நீதிமன்ற விசாரணையின் போது தமிழக முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா அமர்வில் தமிழகம் தொடர்பான குற்ற வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் பி.கருணாகரன் ஆஜராகி, “நான் ஏற்கெனவே இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜராகி இருந்தேன். தற்போது அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்றுள்ளதால், இந்த வழக்கின் பொறுப்பை வேறு ஒருவருக்கு மாற்ற வேண்டும். வழக்கினை தள்ளிவைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியுள்ளன. எனினும், தற்போதைக்கு தமிழக முதல்வரின் செயல்பாடுகள் குறித்து நல்ல தகவல்கள் எங்களுக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கருத்து தெரிவித்தனர். “இதை தமிழக முதல்வரின் செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்” என்று வழக்கறிஞர் கருணாகரன் தெரிவித்தார்
தாராபுரத்தில் நடைபெற்ற தவெக வேட்பாளர் ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இதனைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளே முதலமைச்சர் விஜய்யின் ஆளுமை மற்றும் பணிகளைப் பாராட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தியாவிலேயே இவரைப் போன்ற திறமையான முதல்வர் இல்லை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Supreme Court Justice Sanjiv Sachdeva praises CM Joseph Vijay, saying he has received highly positive feedback about Vijay’s work and expressed happiness for the people of Tamil Nadu
Tags: தமிழக செய்திகள்
