தாராபுரம் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னிலை
தாராபுரம் வாக்கு எண்ணிகையில் அதிமுக முன்னிலையில் உள்ளது

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் தபால் வாக்குகளில் மட்டுமே திமுக முன்னிலை வகித்தது; தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) வாக்குகள் எண்ணப்படும் நிலையில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணப்படத் தொடங்கியதில் இருந்து, அதிமுக வேட்பாளர் கே. பானுமதி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் பி. சத்தியபாமா இரண்டாவது இடத்திலும், திமுக வேட்பாளர் எஸ். சுகன்யா மூன்றாவது இடத்திலும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்
தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டன.
பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டதில் தவெக முன்னிலை வகித்தது
மதுராந்தகம் தொகுதியில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 21 முதல் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
தவெக சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) மற்றும் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால், இன்றைய தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
காலை 10.15 மணி நிலவரப்படி:-
மதுராந்தகம்:- 6 வது சுற்று
தவெக - 20163
திமுக - 13856
அதிமுக - 11488
தாராபுரம்:- 4 வது சுற்று
அதிமுக - 10773
தவெக - 9815
திமுக - 8906
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்