வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 1 லட்சம் மானியம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 1 லட்சம் மானியம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியில் வீட்டுக்கூரைகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மொத்தம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
1 கிலோவாட் (1 kW): மத்திய அரசு மானியம் ரூ.30,000 + தமிழக அரசு மானியம் ரூ.5,000 = மொத்தம் ரூ.35,000
2 கிலோவாட் (2 kW): மத்திய அரசு மானியம் ரூ.60,000 + தமிழக அரசு மானியம் ரூ.10,000 = மொத்தம் ரூ.70,000
3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் (3 kW & Above): மத்திய அரசு மானியம் ரூ.78,000 + தமிழக அரசு மானியம் ரூ.22,000 = மொத்தம் ரூ.1,00,000
வீட்டு உபயோகத்திற்கான TANGEDCO மின் இணைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.கிளைடன் (Grid-connected) முறையில் அமைக்கப்பட வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் (Empanelled vendors) மூலமாக மட்டுமேநிறுவ வேண்டும்.
விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களை அறிய தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி இணையதளம் பக்கத்தைப் பார்வையிடலாம்.
https://www.tnebltd.gov.in/usrp/index_tamil.xhtml
விண்ணப்பிப்பது எப்படி:-
முதலில் மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்திற்க்கு செல்லுங்கள்
அடுத்து அதில் apply for rooftop solar என்பதை கிளிக் செய்யவும்
அதன்பின்பு அதில் registration என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் தமிழநாடு என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள், அதன்பின்பு உங்கள் மாவட்டத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள் , அடுத்து உங்கள் மின் இனைப்பு எண் முழுவதுமாக பதிவிடுங்கள்
அதன்பின்பு மின் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் பெயர் அங்கு காண்பிக்கப்படும் அதனை சரிபார்த்து அடுத்து என்பதை கிளிக் செய்யவும்
அதன்பின்பு உங்கள் மொபைல் நம்பரை பதிவிடுங்கள், அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஒடிபியை பதிவிட்டால் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவாகி விடும்
லாகின் செய்வது எப்படி:-
அதன்பின்பு மீண்டும் மேல் உள்ள லிங்க் சென்று அதில் apply for rooftop solar என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் Login to Apply for Rooftop Solar என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுங்கள் அடுத்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு உள் நுழைந்து உங்கள் விண்ணபத்தை சரியாக பூர்த்தி செய்து சப்மிட் செய்யுங்கள்
அதன்பினு மின்சேவை அளிக்கும் நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கவும்.
உங்களுடைய வீட்டில் நிறுவுவதற்கு சாத்தியமுள்ளது என்று ஒப்புதல் அளிக்கப்பட்ட பின், நாம் சூரிய மின்தகடுகளை நிறுவலாம்
அதன்பின்பு அது தொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, மீட்டருக்காக விண்ணப்பிக்கவும்
மீட்டர் நிறுவப்பட்டு, மின்சேவை வழங்கும் நிறுவனம் ஆய்வு செய்து, இணையதளத்தில், மின்சார உற்பத்தி செய்வதற்கான அனுமதி சான்றிதழை வழங்கும். இவ்வாறு சோலார் மின்தகடு நிறுவியதற்கான அறிக்கை உருவாகும். அதன்பின், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு, 30 நாட்களுக்குள், உங்களுடைய வங்கிக் கணக்குக்கு, மானியத் தொகை செலுத்தப்படும்.
மானியம் எவ்வளவு?
மூன்று கிலோவாட் வரை, ஒவ்வொரு கிலோவாட்டுக்கும், 18,000 ரூபாய் மானியம் கிடைக்கும். மூன்று முதல், 10 கிலோவாட் வரை நிறுவினால், முதல் மூன்று கிலோ வாட்டுக்கு, தலா 18,000 ரூபாயும், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும், தலா, 9,000 ரூபாயும் மானியமாக கிடைக்கும்.
Tags: தமிழக செய்திகள்
