10 ம் வகுப்பு பாஸா - தமிழக அரசின் குரூப் 4 வேலை ரெடி - உடனே விண்ணப்பியுங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அரசு பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். 2026-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு அக்.6-ஆம் தேதி வெளியிடப்படும் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலர் பானோத் ம்ருகேந்தர் லால் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார்.
நவ.5 வரை விண்ணப்பிக்கலாம்: அதன்படி இத்தேர்வுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 6) முதல் நவ. 5-ஆம் தேதி வரை இணையவழியில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவ.9 முதல் நவ.11 வரையிலான நாள்களில் வாய்ப்பு வழங்கப்படும்.
காலி இடங்கள்:
6,574 பணியிடங்கள்.
பதவிகள்:
கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் இதர பதவிகள்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்
நவம்பர் 5, 2026.
தேர்வு தேதி:
ஜனவரி 10, 2027 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை.
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு உரிய தட்டச்சுச் சான்றிதழ்கள் அவசியமாகும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.tnpsc.gov.in/
Tags: வேலைவாய்ப்பு
