Breaking News

அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

அக்டோபர் 1 முதல்  நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம்




சிலிண்டர் விநியோக முறைகளில் OTP சரிபார்ப்பு:

எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோக விதிமுறைகளில் OTP சரிபார்ப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, சமையல் கேஸ் பெறும்போது முன்பதிவு ரசீதைக் காண்பிப்பது மட்டும் போதாது. முன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். சிலிண்டரை பெற்றுக்கொள்ளும்போது அந்த OTP-யை விநியோகஸ்தரிடம் தெரிவிக்க வேண்டும். 

SBI புதிய கட்டணங்கள்:

எஸ்பிஐ வங்கியில் கிளை வழியாக தொடஙகப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறை வரை பணம் எடுப்பது இலவசமாகும். 5-வது முறை முதல் ஒவ்வொரு பணம் எடுக்கும் பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டணம் அக்டோபர் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் முறையிலான அனைத்து பரிவர்த்தனைகளும் எந்த கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளளது.

SBI Salary Package கணக்கு வைத்திருப்பவர்கள் பிற வங்கி ATM-களில் மாதத்திற்கு இலவசமாக செய்யக்கூடிய பரிவர்த்தனைகள் 10-ல் இருந்து 5 ஆக குறைகின்றன.

சொத்துவரி :

தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதிக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில், அக்டோபர் 1 முதல் நிலுவைத் தொகைக்கு தனி வட்டி (Penal Interest) வசூலிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் பயோமெட்ரிக்:

மானிய விலையில் எல்பிஜி (LPG) சிலிண்டர் பெற [கேஒய்சி மற்றும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் (BAA)] கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைச் செய்யாவிட்டால் மானியம் கிடைக்காமல் சந்தை விலையில் சிலிண்டர் வாங்க நேரிடும். உடனடியாக உங்கள் எரிவாயு முகவரை (Gas Agency) தொடர்புகொள்வது நல்லது.மானிய விலையில் LPG சிலிண்டர் பெற பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் அவசியமாகிறது. ஏற்கனவே முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை.

UPI கட்டணங்கள்

அக்டோபர் 15 முதல் ரூ.2000க்கு மேல் உள்ள வணிகர்களின் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத (8 ரூபாய்) கட்டணத்தை மத்திய அரசு விதித்துள்ளது.ரூ.2000 அல்லது அதற்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை. 

தனிநபர் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது இலவசம். ரூ.75000 மற்றும் அதற்கு மேற்பட்டட பரிவர்த்தனைகளுக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.UPI QR Code மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சிறுவணிகர்களுக்கு கட்டணம் இல்லை. ரெயில்வே, எரிபொருள் விற்பனை, தொலைத்தொடர்பு மற்றும் காப்பீடு போன்ற சேவைகளுக்கு ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் நிலையாக ரூ.5 கட்டணம் பொருந்தும்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் விதிகள்:

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 1 ஆண்டுக்கு மேல் 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய, மாவட்ட ஆட்சியர் (District Magistrate), கோட்டாட்சியரிடமும் (Sub-Divisional Magistrate), 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகப் பதிவு செய்வதற்கு முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் (Judicial Magistrate First Class) உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாமதமாகும் விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் முழுமையாகச் சரிபார்த்த பின்னரே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்

குழந்தைகளுக்கான இலவச ஆதார் அப்டேட்:

குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் ஆதார் அப்டேட் (Mandatory Biometric Update) வரும் செப்டம்பர் 30 வரை முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது.

5 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் தங்கள் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) புதுப்பிக்க வேண்டும். குழந்தைகள் 5 வயதை எட்டும்போதும், பின்னர் 15 வயதை எட்டும்போதும் இந்தப் புதுப்பிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 1 முதல் இந்த நடைமுறைக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் இதுவரை பயோமெட்ரிக் ஆதார் அப்டேட் முடிக்காதவர்கள் உடனே முடித்து விடுவது நல்லது.

Bulk FD வட்டி விகித அறிவிப்பு

வங்கிகள் Bulk Deposit-களுக்கான வட்டி விகிதங்களை தங்களது இணையதளத்தில் ஒவ்வொரு வணிக நாளும் காலை 10 மணிக்குள் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு

Tax Audit உட்பட்டவர்களுக்கான Tax Audit Report தாக்கல் காலக்கெடு அக்டோபர் 21, 2026 என்றும், அதற்குட்பட்ட ITR தாக்கல் காலக்கெடு நவம்பர் 21, 2026 என்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback