அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்கள் எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம் இதோ
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது! தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை- வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய மேல் காற்று சூறாவளி சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இதன் காரணமாக சென்னைக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் கூறியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவு பகுதிகள் முதல் மத்தியமேற்கு வங்கக்கடல்ப்பகுதிகள் வரை கர்நாடகா, தெற்கு ஆந்திரா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடஉள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடஉள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 7.6 கிமீ உயரம் வரை மத்திய மேற்க்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
19-10-2026: சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
20-10-2026: தேனி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்.கரூர், பெரம்பலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, சுன்னியாகுமரி, அரியலூர் மாவட்டங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
21-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கரூர் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
22-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, புதுக்கோட்டை, கரூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
23-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Tags: தமிழக செய்திகள்
