Breaking News

டோட்லா டெய்ரி நிறுவனத்தில் உற்பத்தியாகும் பால் தரமற்றது என ஆய்வில் கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0

டோட்லா டெய்ரி நிறுவனத்தில் உற்பத்தியாகும் பால் தரமற்றது என ஆய்வில் கண்டுபிடிப்பு



டோட்லா டெய்ரி நிறுவனத்தில் உற்பத்தியாகும் பால் தரமற்றது என மத்திய உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் கண்டுபிடிப்பு

உயிர் ஆர்கானிக் நிறுவனத்தின் மஞ்சள் நிற உலர் திராட்சையில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் உள்ளது - FSSAI

உலர் திராட்சை கெட்டுப்போகாமல் இருக்க, அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு - FSSAI

தரமற்ற உணவுப்பொருள் தயாரித்த டோட்லா டெய்ரி, உயிர் ஆர்கானிக் நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய மத்திய உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை

திண்டுக்கலில் இயங்கி வரும் டோட்லா டெய்ரி நிறுவனத்தில் உற்பத்தியாகும் பால் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் டோட்லா பால் தரமற்றது என்பது கண்டறியப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் உள்ள உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உணவுப் பாதுகாப்புத் தரங்களை மீறியதற்காக சூர்யா ஃபுட் & அக்ரோ (Surya Food & Agro), தோட்லா டேரி (Dodla Dairy) மற்றும் யுஇஐஆர் ஆர்கானிக் ஃபுட்ஸ் (UEIR Organic Foods) ஆகிய முன்னணி நிறுவனங்கள் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், நார்ப்பதம் ஃபுட்ஸ், சன் ரிட்ஜஸ் ஹெல்த் கேரர்ஸ் மற்றும் மெசர்ஸ் ஷா காந்திலால் ஜெயந்திலால் ஆகிய நிறுவனங்களுக்கும் எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.'

பட்டர் பைட்' (Butter Bite) மற்றும் 'மேரி லைட்' (Marie Lite) உள்ளிட்ட புகழ்பெற்ற பிஸ்கட்களை தயாரிக்கும் பிரியாஃபோல்ட் (Priyagold) நிறுவனம், நார்ச்சத்தின் ஆதாரமாக கால்நடைகளுக்கான தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் தவிட்டைப் பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்துள்ளது. 

தொழிற்சாலையில் இருந்த தவிட்டுப் பைகளில், அப் பொருட்கள் கால்நடை தீவனத்திற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் குறியீடுகள் இருந்தன. பொதுவாகக் கோதுமைத் தவிடு, எண்ணெய்யெடுக்கப்பட்ட அரிசித்தவிடு மற்றும் சோளத் தவிடு ஆகியவை கால்நடை தீவனங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன.

இதுமட்டுமன்றி, சூர்யா ஃபுட் & அக்ரோ நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் போதிய சுகாதாரமின்மை, பூச்சி கட்டுப்பாடு இல்லாமை, மூலப்பொருட்களைச் சேமித்து வைக்கும் முறையில் குறைபாடுகள், பணியாளர்களின் சுகாதாரமின்மை மற்றும் வளாகப் பராமரிப்பின்மை போன்ற கடுமையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால் அந்நிறுவனத்தின் உரிமம் உடனடியாக இடைநீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பால் உற்பத்தி நிறுவனமான தோட்லா டேரி மீது எஃப்எஸ்எஸ்ஏஐ சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பு மையத்திலிருந்து சேகரிக்கப்பட்ட 'ஃபுல் கிரீம்' பால் (Full Cream Milk) மாதிரி பரிசோதிக்கப்பட்டதில், அது பாதுகாப்பற்றது மற்றும் தரமற்றது எனத் தெரியவந்தது.

இதுகுறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்ட பதிவில், "சேகரிக்கப்பட்ட பால் மாதிரியில் சோப்புத் தூள்/காஸ்டிக் சோடா (Detergent/Caustic Soda) கலந்திருப்பது கண்டறியப்பட்டதால் அது பாதுகாப்பற்றது என்றும், பாலின் கொழுப்புச் சத்து நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை விடக் குறைவாக இருப்பதால் தரமற்றது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

இயற்கை மற்றும் ஆர்கானிக் உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ஈரோட்டைச் சேர்ந்த யுஇஐஆர் ஆர்கானிக் ஃபுட்ஸ் (UEIR Organic Foods Private Limited) நிறுவனத்தின் உலர் திராட்சை (Yellow Raisins) மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மாதிரியில் அஸாக்சிஸ்ட்ரோபின் (Azoxystrobin), ஃப்ளூயோபிராம் (Fluopyram), இமிடாக்ளோப்ரிட் (Imidacloprid), டெபுகோனசோல் (Tebuconazole) உள்ளிட்ட 9 வகையான வேதிப்பொருட்களின் கழிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

 பாதுகாப்பற்ற உணவுகளை விநியோகிப்பது தொடர்பான எஃப்எஸ்எஸ் சட்டப் பிரிவு 59-ன் (Section 59 of FSS Act, 2006) கீழ் இந்த நிறுவனம் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளதாக உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Give Us Your Feedback