Breaking News

வீட்டிலிருந்தே சமையல் எரிவாயு சிலிண்டர் eKYC செய்வது எப்படி முழு விபரம் indane gas e kyc online

அட்மின் மீடியா
0

 சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC கட்டாயம் என அறிவிப்பு


எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டாளர்கள் தங்கள் இணைப்பிற்கான e-KYC சரிபார்ப்பை முடிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்தச் செயல்முறையை உரிய நேரத்தில் முடிக்கத் தவறினால் எரிவாயு மானியம் நிறுத்தப்படலாம் அல்லது இணைப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம்

ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ eKYC செய்யலாம். 

eKYC செய்யாவிட்டால் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம்கள் நடக்கும் என  எல்பிஜி எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தல்

உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தபடியே உங்கள் LPG e-KYC-ஐ ஆன்லைனில் இலவசமாகப் பூர்த்தி செய்யலாம். 

பாரத் கேஸ் கஸ்டமர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் "Hello BPCL" செயலி மற்றும் ஆதார் அமைப்பின் "AadhaarFaceRD'" செயலியை டவுன்லோடு செய்து, வீட்டிலிருந்தபடியே முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் நொடிகளில் இ-கேஒய்சி செய்து கொள்ள முடியும்.

ஆன்லைன் வசதிகள்ஆன்லைன் வசதி இல்லாத பொதுமக்கள், தங்களது அருகில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாகவே சென்று, அங்கிருக்கும் பயோமெட்ரிக் கருவி வாயிலாக விரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்து தங்களது இணைப்பைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

சமையல் எரிவாயு கணக்கில் எல்பிஜி நுகர்வோர் எண், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவை சரியாக இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே மானியத் தொகை தடையின்றி கிடைக்கும். 

அதனால் கடைசி நேர நெரிசலையும், மானியம் நிறுத்தப்படுவதையும் தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் 16ம் தேதிக்குள் இந்த இ-கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறையை உடனடியாக நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

eKYC செய்ய வேண்டிய முறைகள்

நேரில் செய்யும் முறை: 

உங்கள் எரிவாயு விநியோகஸ்தரை (Gas Distributor/Showroom) நேரில் அணுகி பயோமெட்ரிக் முறையில் eKYC செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் முறை: 

தொடர்புடைய எரிவாயு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மற்றும் Aadhaar FaceRD செயலியைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தபடியே முகத்தை ஸ்கேன் செய்து ஆன்லைனில் முடிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.pmuy.gov.in/e-kyc.html

பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள்:'Hello BPCL' செயலியைப் பதிவிறக்கி, பதிவுசெய்த மொபைல் எண் மற்றும் OTP மூலம் உள்நுழைய வேண்டும். அதில் பாரத் கேஸ் இணைப்பைத் தேர்ந்தெடுத்து 'e-KYC / ஆதார் சரிபார்ப்பு' பகுதிக்குச் சென்று, Aadhaar Face RD செயலி மூலம் முகத்தைச் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இண்டேன் (Indane Gas) வாடிக்கையாளர்கள்:'IndianOil One' செயலியைப் பதிவிறக்கி உள்நுழைந்து, தேவைப்பட்டால் 16-இலக்க எல்பிஜி ஐடியை இணைக்க வேண்டும். பின் 'e-KYC / ஆதார் அங்கீகாரம்' விருப்பத்தைத் தேர்வுசெய்து, முகத்தைச் ஸ்கேன் செய்து சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும்.

ஹெச்பி கேஸ் (HP Gas) வாடிக்கையாளர்கள்:'HP Pay' செயலியைப் பதிவிறக்கி உள்நுழைந்து, ஹெச்பி கேஸ் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் 'e-KYC' விருப்பத்தை க்ளிக் செய்து, Aadhaar Face RD செயலி வாயிலாக முக ஸ்கேன் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback