கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி பலியான கால்பந்து வீரர் வைரலாகும் வீடியோ footballer has tragically died after being struck by lightning during a match
தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பயங்கர மின்னல் தாக்கியதில் ஒரு வீரர் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள நாராதிவாட் (Narathiwat) மாகாணத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற கோலக் கோப்பை (Golok Cup) கால்பந்து போட்டியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.திடீரென ஏற்பட்ட இடி-மின்னல் தாக்குதலில் 24 வயது கால்பந்து வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்தில் மலேசிய வீரர் உட்பட 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் - அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. சன்டிபாப் விளையாட்டரங்களில் போட்டி நடந்தது.
அப்போது சாம்கொல்ட்ஸ் அணியின் 24 வயது வீரரான சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் நிலைகுலைந்த அவர், மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
சக வீரர்கள் மற்றும் அவசர மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் ஒருவர் உட்பட 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே வீரர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2085380203522732358
In Thailand, a 24-year-old footballer has tragically died after being struck by lightning during a match.The same strike injured 12 other players on the pitch causing them to collapse.Sofwan Awae had just signed as a professional with Yala FC.
Tags: வெளிநாட்டு செய்திகள்
