UPI ல் பணம் அனுப்பினால் கட்டணமா - உண்மை என்ன ? யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? - நிதியமைச்சர் விளக்கம்!
UPI ல் பணம் அனுப்பினால் கட்டணமா - உண்மை என்ன ? யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? - நிதியமைச்சர் விளக்கம்!
கூகுள் பே உள்ளிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க அரசு ஒப்புதல் தரும் மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் இனி UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பிறசேவை வழங்குநர்களால் கட்டணம் விதிக்க முடியும். இருப்பினும் இந்த கட்டணம், தனி நபர்களுக்கு பொருந்தாது, நுகர்வோர் - நிறுவனம், நிறுவனம் - நிறுவனம் இடையேயான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிப்பு.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை மக்களவையில் இன்று (ஆக. 6) தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது விவாதம் நடத்த ஆளும் கட்சி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மசோதா விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
யுபிஐ மற்றும் பிற மின்னணு கட்டண முறைகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்களை அனுமதிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007-ல் திருத்தங்களை மேற்காள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
மின்னணு கட்டண முறைகளுக்கு வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் சட்ட விதியை இந்த திருத்தம் நீக்கும்.
இதன் மூலம், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பிறசேவை வழங்குநர்களால் கட்டணம் விதிக்க முடியும். இந்த கட்டணம், தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இருக்காது என்றும், நுகர்வோர் - நிறுவனம், நிறுவனம் - நிறுவனம் இடையேயான பணபரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் இலவசம்:-
வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ சேவைகள் தொடர்ந்து இலவசம்; சிறு வியாபாரிகளுக்கும் கட்டணம் ஏதுமில்லை
தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது இருக்காது UPI பரிவர்த்தனை பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசம்!
நண்பர்களுக்கு பணம் அனுப்புவது (P2P), கடைகளில் ஸ்கேன் செய்து பொருட்கள் வாங்குவது (P2M) என அனைத்தும் 100% இலவசமாகும் அதேபோல் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும், மறைமுக ஜிஎஸ்டியும் (GST) கிடையாது.
யாருக்கெல்லாம் கட்டணம்:-
வாலட் (Wallet) பயன்பாடு:டிஜிட்டல் வாலட் (Prepaid Wallets) மூலமாக ₹2,000-க்கு மேல் கடைகளுக்கு பணம் செலுத்தினால், கடைக்காரர்களுக்கு மட்டுமே (Interchange Fee) கட்டணம் வசூலிக்கப்படும்
நுகர்வோருக்கும் நிறுவனத்திற்கும், ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கும் இடையேயான பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த மசோதா பொருந்தும்
கிரெடிட் கார்டை இணைத்து கடைகளில் பெரிய தொகைக்கு பணம் செலுத்தும்போது, வணிகர்களுக்கான நிலையான MDR கட்டணங்கள் பொருந்தும்
எம்டிஆர் (Merchant Discount Rate) எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல்கள் பரவியதால் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிலளித்தார். “ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதற்கு முன் கவனியுங்கள். எம்டிஆர் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தாது” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
எம்டிஆர் மூலம் கிடைக்கும் வருவாய், வங்கிகள் மற்றும் யுபிஐ நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, புதிய தொழில்நுட்பங்கள், புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு வசதிகளில் அதிக முதலீடு செய்ய உதவும் என்றும், இதன் பலன் அனைத்து யுபிஐ பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் அவர் விளக்கினார்.
Tags: தமிழக செய்திகள்
