8,700 கி.மீ வேகத்தில் நிலவில் மோதிய ராக்கெட் எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ Falcon 9 Rocket Crash on Moon video
8,700 கி.மீ வேகத்தில் நிலவில் மோதிய ராக்கெட் எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ Falcon 9 Rocket Crash on Moon video
SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் மேல் நிலை பகுதி ஒன்று நிலவில் மோதியது. மணிக்கு சுமார் 8,700 கி.மீ வேகத்தில் மோதியதில் நிலவில் 30 மீட்டர் விட்டம் கொண்ட புதிய பள்ளம் உருவாகியுள்ளது.
எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் நிலவின் மேல்பரப்பில் மோதியது. இந்த நிகழ்வை அமீரகத்தின் வானியல் மையம் கண்காணித்து எடுத்த
கடந்த 2025-ம் ஆண்டு பயர்பிளை ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் நிலவு பயண லேண்டர் வாகனங்களை ஸ்பேஸ்-எக்ஸ் என்ற எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் சுமந்து சென்றது.
அதன் பிறகு நிலவுக்கான லேண்டர்களை அதன் பாதைக்கு சேர்த்தபிறகு புவி மற்றும் நிலவு ஈர்ப்பு விசை காரணமாக நீண்ட சுற்றுப்பாதையில் வந்து கொண்டு இருந்தது.
அந்த ஆண்டின் ஜனவரியில் விண்வெளிக்கு சென்ற ராக்கெட்டின் 2-ம் கட்ட பாகம் தொடர்ந்து அங்கேயே மிதந்து கொண்டு இருந்தது.
சுமார் 4 ஆயிரம் கிலோ எடையுள்ள, ஒரு பஸ் அளவு பருமன் கொண்ட இந்த ராக்கெட் பாகமானது மணிக்கு 8 ஆயிரத்து 690 கி.மீ. வேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் நிலவை நோக்கி சென்றது.
அதில் அமீரக நேரப்படி நேற்று காலை 10.30 மணியளவில் நிலவின் மேல் விளிம்பில் உள்ள ஐன்ஸ்டீன் கிரேட்டர் என்ற பகுதியில் பயங்கரமாக மோதியது.
மோதல் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் முதன்மை தொலைநோக்கி மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் மோதலின்போது பெரும் புழுதி காரணமாக அதன் வெடிப்பு மற்றும் வெளிச்சத்தை பதிவு செய்ய முடியவில்லை. தூசிப்படலம் அதிகமாக வானில் இருந்ததால் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியவில்லை.
அப்போது நிலவின் நிலப்பரப்பை ராக்கெட் மோதும்போது சுமார் 1.100 டன் எடையுள்ள நிலவு பாறைகள் மற்றும் மண் தூசியாக விண்ணில் கிளம்பி இருக்கலாம் என கருதப்படுகிறது.
நிலவின் குறைந்த புவியீர்ப்பு விசை காரணமாக இந்த தூசிகள் சுமார் 10 அடி உயரம் வரை மேலே எழும்பி இருக்கலாம் என தெரிகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2085369376648413499
SPACEX ROCKET CRASHES INTO THE MOON AFTER LOSING CONTROL
SpaceX's Falcon 9 rocket ended up crashing into the Moon after losing control upon completing its mission.
Although the impact poses no danger to Earth, experts warn that the case highlights the challenges posed by the growing accumulation of space debris for future explorations.
Tags: வெளிநாட்டு செய்திகள்
