தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது மீறினால் அபராதம் - தமிழக அரசு Bike taxis are not allowed in Tamil Nadu
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறினால் அபராதம் - தமிழக அரசு
தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது. விதியை மீறி பைக் டாக்சி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்" என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.
பைக் டாக்சிக்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்
பைக் டாக்சி குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய போக்குவரத்து துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து, ஒரு குழு அமைத்து அதன் பிறகே முடிவு எடுக்க முடியும்
குழு அமைத்த பிறகே பைக் டாக்சிக்கு அனுமதியா? இல்லையா என முடிவெடுக்க இயலும்
முடிவெடுக்கும் வரை தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது
விதிகளை மீறி பைக் டாக்சி ஓட்டி வந்தால் அபராதம் விதிக்கப்படும்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரையைச் சேர்ந்த நவீன்குமார் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் ரேப்பிடோ, ஓலா, ஊபர் போன்ற 'பைக்-டாக்ஸி' சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் உள்ளன. ஆனால், இந்தச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் திட்டமோ, விதிகளோ தமிழகத்தில் இல்லை.
ஆட்டோ, டாக்ஸிகளை போல, பைக் டாக்ஸி சேவைகள் தனித்து இயங்க முடியாது. அவை முழுமையாக சம்பந்தப்பட்ட எண்ம சேவை நிறுவனங்களைச் சார்ந்துள்ளன. அந்த நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்கள் சேவையைத் தொடர்ந்து அளித்து வருகின்றன.
இந்த நிலையில், போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையின் போது பைக்- டாக்ஸி சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
எனவே, பைக்- டாக்ஸிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும். சட்டப்படி உரிமம் வழங்கி, பைக் டாக்ஸி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் குழு அமைத்து ஆய்வு செய்த பிறகே இதில் கொள்கை முடிவு எடுக்க முடியும்... அதுவரை அனுமதி இல்லை என தமிழக அரசு வாதம். விரைவில் கொள்கை முடிவு எடுக்க நீதிபதிகள் உத்தரவு.
Tags: தமிழக செய்திகள்
