ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்ன என்ன முழு விவரம்
ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்ன என்ன முழு விவரம்
சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம்.
கிரெடிட் கார்டு
ஆகஸ்ட் 1 முதல் பல வங்கிகள் தங்களின் கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றங்களை அமல்படுத்தலாம். இதன் ஒரு பகுதியாக ரிவார்டு பாயிண்டுகள், ஆண்டு பராமரிப்புக் கட்டணம், சேவைக் கட்டணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகளில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.அதுவும் சில வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களையும் திருத்தலாம். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்தால், அதன் தாக்கம் வீட்டுக் கடன், வாகனக் கடன் EMI-கள் மற்றும் FD வட்டி விகிதங்களிலும் பிரதிபலிக்கக்கூடும்.
ஆதார்
ஆகஸ்ட் 1 முதல் ஆதார் தொடர்பான KYC செயல்முறையிலும் புதிய மாற்றம் வருகிறது. இதன்படி, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள்(Asset Management Companies) KYC 2.0 (CKYC) முறையை அமல்படுத்த உள்ளன.
குறிப்பாக இந்த புதிய முறையால் கணக்கு தொடங்கும்போதோ அல்லது KYC அப்டேட் செய்யும்போதோ, வாடிக்கையாளரின் ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய பதிவேட்டில் உள்ள தகவல்களை நேரடியாக பயன்படுத்த முடியும். எனவே இது நிதி மோசடிகளை எளிமையாக தடுக்க உதவும்
தட்கல் டிக்கெட்
ஆகஸ்ட் 1 முதல், ரயில் பயணிகளுக்காக தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய டோக்கன் முறை அறிமுகமாகிறது. முதற்கட்டமாக மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
யுபிஐ மூலம் பிஎஃப் பணம்
மிகவும் அதிகம் எதிர்பார்த்த பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் வசதி வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
தற்போது அதற்கான வேலைகளை செய்து வருகிறது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation). குறிப்பாக இந்த வசதி பல்வேறு பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
வருமான வரி தாக்கல்
2026-27 நிதியாண்டுக்கான ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு ஜூலை 31-இல் முடிவடைந்துள்ளதால், அதற்குப் பிறகு தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.எனினும், ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களை ஆகஸ்ட் 31 வரை தாக்கல் செய்யலாம் என்றும், தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளுக்கான தனித்தனி காலக்கெடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள்
