Breaking News

60 மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்ட 5 வயதுச் சிறுமி வைரல் வீடியோ..!

அட்மின் மீடியா
0

நேபாள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 60 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்குள் உயிருடன் போராடிய 5 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 



நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் உள்ள எல்லைக் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மனீஷா உச்சாய் மகர் (Manisha Uchhai Magar) என்ற 5 வயதுச் சிறுமி வீட்டின் இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குள் புதையுண்டார். சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் நிலைதடுமாறித் தவித்த நிலையில், 60 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு நடுவே எழுந்த மெல்லிய அழுகைச் சத்தத்தைக் கேட்டு மீட்புக் குழுவினர் அவரை அதிரடியாக மீட்டெடுத்தனர்.

உடலில் பல காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக காத்மண்டுவில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பல நாட்கள் தேடுதலுக்குப் பிறகு மருத்துவமனையில் மகளைக் கண்ட பெற்றோர் அவரைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டனர். 

அப்போது, இருண்ட இடிபாடுகளுக்குள் மூன்று நாட்கள் தனியாகப் பயத்தில் நடுங்கிய சிறுமி, தனது பெற்றோரிடம் கேட்ட மழலைக் கேள்வி அங்கிருந்த மீட்புப் பணியாளர்களையும் மருத்துவர்களையும் நெகிழச் செய்தது.

அதேபோல்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 45 நாட்களேயான பச்சிளம் குழந்தையை நேபாளப் பாதுகாப்புப் படையினர் எவ்விதக் காயமுமின்றிப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நேபாளத்தின் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ரசுவா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் உயரமான பகுதிகளிலும் மாடிகளிலும் தஞ்சமடைந்தனர்.

பாக்மதி மாகாணத்திற்கு உட்பட்ட ரசுவா மாவட்டத்தில் நேபாள ராணுவம் மற்றும் ஆயுதக் காவல் படையினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒன்றரை மாதக் குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தை உடனடி மருத்துவப் பரிசோதனைக்காகத் தற்காலிக அவசரக்கால மீட்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அதன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. வெள்ளப் பேரிடரிடையே பச்சிளம் குழந்தையைக் காக்க ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இந்த மீட்புப் பணி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2094987926149251519

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback