நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. உயிரை காப்பாற்ற ஓடும் மக்கள் அதிர்ச்சி வீடியோ காட்சிகள்! Nepal flood video
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. அதிர்ச்சி வீடியோ காட்சிகள்!
நேபாளத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ரசுவா (#Rasuwa) மாவட்டத்தில், திபெத் பகுதியிலிருந்து உருவான திடீர் மற்றும் மிக உக்கிரமான மின்னல் வெள்ளம் (#FlashFlood) கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் திடீரென்று ராட்சத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேக வெடிப்பு காரணமாக இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த வெள்ளப்பெருக்கில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தில் பெருமளவில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. தற்போது இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள் அரசுக்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காகத் தற்போது இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்னும் சேதம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத் தற்போது வரை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தாழ்வான மற்றும் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பகுதிகள் முற்றிலுமாக கடும் சேதத்தைச் சந்திக்கின்றன.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்ற தனியார் சுற்றுலா நிறுவனம் நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் 30 தமிழர்களின் இருப்பிடம் பற்றி தெரியவில்லை. 3 பேருந்துகளில் சென்ற நிலையில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
திபெத்திலிருந்து திடீரென வந்த பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடி வாகனங்கள், குடியிருப்புகள் மற்றும் முக்கிய நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதமடைந்துள்ளன.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/2092562920513364046
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/2092562834475618643
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/2092562777135358108
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/2092562643366433237
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/2092563865313878452
Tags: இந்திய செய்திகள்
