Breaking News

வீட்டுப் பாடம் செய்யாமல் வந்த LKG படிக்கும் மாணவன் ஆசிரியை அடித்ததில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

வீட்டுப் பாடம் செய்யாமல் வந்த LKG படிக்கும் மாணவன் ஆசிரியை அடித்ததில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு அதிர்ச்சி வீடியோ

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் கத்ரொட் பகுதியில் உள்ள தனியார் கிண்டர் கார்டன் பள்ளியில், 6 வயதான பிரனாய் தேஜ் என்ற மாணவன் எல்.கே.ஜி படித்துவந்தான்.


இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை அந்த சிறுவன் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு வந்தாகக் கூறி ஆசிரியை அவனைக் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான். இதையடுத்து, சிறுவனை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது, இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவனின் குடும்பத்தார் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டால் தான் மரணத்திற்கான காரணம் தெரியவரும்,

இந்நிலையில், மாணவனின் தந்தை கூறுகையில், ”அவன் காலையில் 8 மணிக்குப் பள்ளிக்குச் சென்றான். அவன் பள்ளிக்குச் செல்லும் போது நல்ல உடல் நலத்துடன் இருந்தான். அவன் வீட்டில் இருந்து செல்லும் போது வழக்கத்திற்கு மாறான எந்த அறிகுறிகளும் அவனிடத்தில் இல்லை. அவன் வழக்கம் போல இயல்பாகவே இருந்தான்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரமாக மாறியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2091736987447570657


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback