TNPSC Group 2 Group 2A தேர்வு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ன கல்வித்தகுதி முழு விவரம்
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
TNPSC Group 2 Group 2A தேர்வு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ன கல்வித்தகுதி முழு விவரம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 2 Group 2A 2026 ம் ஆண்டுக்கான கால அட்டவணையில் தெரிவித்துள்ளபடி, குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணயம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த தேர்வின் மூலம், சார்பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் (கிரேடு2), தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பல்வேறு அரசு துறைகளின் உதவியாளர் உட்பட 821 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திருத்தங்களை மேற்கொள்ள அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.
குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு நவம்பர் 1ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்-
www.tnpsc.gov.in
Tags: தமிழக செய்திகள்
